ஸ்ரீ தேவி பூமிதேவி ஸ்ரீ பத்மாவதி சமேத ஶ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சீனிவாச தெரு வீதியில் அருள்பாளித்து வரும் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி ஸ்ரீ பத்மாவதி சமேத ஶ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஐந்துநிலை ராஜ கோபுரம் பிரதிஷ்டை மற்றும் ஸ்ட்ரீட் பார்வதவர்தினி சமேத ராமநாதேஸ்வரர் ஸம்ப்ரோசஷண ஆகிய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மாவும் பங்கேற்றார் முன்னதாக கோவில் உள் வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் முதற்கால யாக சாலை பூஜையில் பகவத் பிராத்தனை, ஸ்ரீ வரசித்தி கணபதி பூஜை, யஜமான சங்கல்பம், வாஸ்து ஹொமம், அக்னி பிரதிஷ்ட்டை, மற்றும் எட்டாம் கால யாகத்தில் கோ பூஜை, அக்னி ஆராதனை, கும்ப பூஜை, பிரதான ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் மங்கள தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வேத பட்டாட்சியர்கள் பூஜை செய்யப்பட்ட அனைத்து கலசத்தை தலையில் சுமந்து நாதஸ்வரம் மேளதாளம் முழங்க கோவிலில் வலம் வந்து ஐந்து நிலை ராஜ கோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு வந்தடைந்ததும் கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்து மஹா தீபாரதனை காண்பித்தனர்..
அதனைத் தொடர்ந்து கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீரை கோவில் வளாகத்தின் கீழே இருந்த பக்தர்கள் மீது தெளித்தபோது கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கருவறையில் உள்ள சீனிவாச பெருமாள் மற்றும் ராமநாதேஸ்வரருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றதோடு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர தீப ஆராதனை காட்டப்பட்டது நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் வாலாஜாபேட்டை மட்டுமின்றி மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்…
– லோகேஸ்வரி.வெ