இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளார் ஸ்ரீசாந்த். இவர் மொத்தம் 27 டெஸ்ட், 53 ஒருநாள் போட்டி, 10 டி 20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியிருக்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய அவருக்கு 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிகுந்த வருத்தத்துடனும், கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன்: அடுத்த தலைமுறையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் நலன் கருதி எனது முதல் தர கிரிக்கெட் கேரியரை இத்துடன் முடித்துக் கொள்ள நான் முடிவு செய்துள்ளேன், என தெரிவித்துள்ளார்.