சிவகார்த்திகேயன் வீட்டில் விஷேசம்.. கடைக்குட்டிக்கு வைத்த பெயர்..?
சிவகார்த்திகேயன்:
நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்று தற்போது தமிழ் திரைத்துறையில் ஒரு முன்னனி நடிகராக உள்ளார்.
மேலும் பல ஹிட் படங்களையும் கொடுத்து வரும் இவர் தற்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அதை முடித்த பிறகு அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.
திருமண வாழ்க்கை:
சிவாகார்த்திகேயனுக்கு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஆண் குழந்தை உள்ள நிலையில் இவர்களுக்கு சமிபத்தில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அதை அறிவித்த சமயத்தில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். தற்போது குழந்தை பிறந்து 1 மாதம் ஆன நிலையில் கடைக்குட்டிக்கு பெயர் சூட்டும் விழா நடைப்பெற்றுள்ளது.
குழந்தையின் பெயர்:
அதன்படி தனது வீடடில் எளிமையாக நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற விழாவில் கடைக்குட்டிக்கு ”பவன்” என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை சிவாகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ லைக்ஸ் மழையில் நனைந்து வருகின்றது.
-பவானி கார்த்திக்