குற்றாலம் அருவியில் குளிக்க தடை..! ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள்..! அதிகாரிகள் சொன்ன காரணம்..!
தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.., இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சீசன் காலமாக இல்லாமல் அவ்வப்போது பருவநிலை மாறி வருவதால் நீரின் அளவு
சம நிலையில் உள்ளதால்.
கடந்த 2 நாட்களாக அருவிகளில் சீராக தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர். நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று இரவு முதல் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அனைத்து அருவிகளில் குளிக்க சுற்றுலாதுறை அதிகாரிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி மற்றும் புலி அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதித்துள்ளனர். இதனால் இன்று காலை குற்றாலத்துக்கு குளிக்கவந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
– லோகேஸ்வரி.வெ