“வாயை மூடுரியாடா நீ”.. ஆத்திரத்தின் உச்சத்தில் விஜயலட்சுமி..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி 12 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதற்கு ஆதாரம் இருக்கிறதா என கேட்ட செய்தியாளரை விஜயலட்சுமி திட்டிவிட்டு சென்றுள்ளார்.
14 வருடங்களுக்கு முன்பு சீமான் தன்னை மதுரையில் திருமணம் செய்து கொண்டார். நான் பெரியாரின் தொண்டன் எனக்கு தாலி கட்டுவது பிடிக்காது மாலை மற்றும் மாற்றிக்கொள்ளலாம் என சொல்லி என்னை திருமணம் செய்துக்கொண்டார்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கட்கிழமை அன்று நடிகை விஜயலட்சுமி 2 வது முறையாக புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வீரலட்சுமி மற்றும் விஜயலட்சுமியிடன் இது பற்றி புகார் அளித்து விட்டு சமாதானம் செய்துக்கொண்டது ஏன்..? என கேள்வி எழுப்பப்பட்டது.
சீமான் மீது இதற்கு முன் புகார் அளித்த போது வழக்கறிஞ்சர் ஒருவர் சமாதானம் செய்து வைத்தார் மேலும் விஜயலட்சுமியை மனைவியாகவும், கயல் விழியை துணைவியாகவும் வைத்து கொள்ள சீமான் சம்மதித்து விட்டதால் இதுகுறித்து மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டோம்.
சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை.., ஆனால் என்னை ஒரு முறை பொண்டாட்டி என சொல்லிய வீடியோ மட்டும் இருந்தது அதையும் நான் இதற்கு முன் வெளியிட்டுவிட்டேன் என அவர் சொல்ல.., அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் அவர் உங்களை திருமணம் செய்து கொண்டதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது..? என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பிய நிலையில்.., ஆத்திரமடைந்த விஜயலட்சுமி “வாய மூடுறீயா டா நீ.., என்ன ஏண்டா கேள்வி கேட்குற., என சொல்லி சில ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார்.
சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பிய விஜயலட்சுமியை.., உடன் இருந்த வீரலட்சுமி மற்றும் வழக்கறிஞ்சர் சமாதானம் செய்தனர்.., ஆத்திரமாகவும், ஆபாசமாகவும் வீரலட்சுமி பேசியதால் காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post