பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து வந்து தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள், நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கத்தின் தலைவர் ஜாகுவார் தங்கம்.
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சில பிரச்சினைகள் இருந்து வருகிறது. கடந்த 2018ல் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து இதுவரை எந்த தேர்தலும் நடத்தாமல் இருபாதாக சங்கத்தின் உறுப்பினர்கள் புகார் ஒன்றை அளித்துள்ளனர்..
பின்னர் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர். அந்த வழக்கில் மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்ததையடுத்து ஜாக்குவார் தங்கம் மற்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து சங்கத்தை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கத்தின் தலைவர் ஜாகுவார் தங்கம் கடந்த 10 நாட்களாகவே சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள்,செயலாளர்களிடம் அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 6 மணி அளவில் சங்கத்தின் தலைவர் ஜாகுவார் தங்கம் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை திரட்டி முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு சென்னை டி.நகரில் உள்ள தென்னிந்தியா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் புகுந்து நிர்வாகிகள் செயலாளர்களை மிரட்டி உள்ளனர் எங்களது தலைவர் புகைப்படத்தை எப்படி கிழிக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்
பின்னர் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்து காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். இது குறித்து பெண்களிடம் காவல் துறை விசாரித்த போது அலுவலகத்தில் உள்ளே இருப்பவர்களை வெளியே வர சொல்லுங்கள் அவர்களிடம் நாங்கள் பேச வேண்டும் என்று காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் பின்னர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்
பின்னர் இதுகுறித்து பேட்டியளித்த தென்னிந்திய திரைப்பட மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் துரை
கடந்த 10 நாட்களாகவே எங்களுடன் ஜாகுவார் தங்கம் பிரச்சனை செய்து வருகிறார் என்றும், மேலும் அவர் தலைவராக இருந்ததிலிருந்து பல லட்சம் சங்கத்தின் பணத்தை கையாடல் செய்துள்ளார், இது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் இதுபோன்ற ஆட்களை திரட்டி வந்து மிரட்டுகிறார் என்றும் தெரிவித்தார்.
சங்க தேர்தலின் படி ஒரு தலைவர் இரண்டு ஆண்டுகளாக மட்டுமே தலைவர் பொறுப்பில் இருக்க முடியும் பிறகு மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தேர்தல் நடத்தாமல் சங்க பணத்தை கையாடல் செய்து வருகிறார். இது குறித்து கேட்டால் எங்களை ஆட்களை திரட்டி வந்து அடிக்க பார்க்கிறார் மேலும் எங்கள் சங்கத்தில் உள்ளவர்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஜாக்குவார் தங்கமே காரணம் என்று கூறினார்.
Discussion about this post