இந்தியாவிற்கு வருகை தருகிறார் சோனியா காந்தி..!! எதற்கு தெரியுமா..?
திமுக மகளிர் அணி சார்பில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தமிழ்நாடு வருகிறார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் ஒன்றிய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
திமுகவின் மகளிர் அணி சார்பாக நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க 5 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
இன்றிரவு சென்னை வரும் சோனியா காந்தியை விமான நிலையம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாளை காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சோனியா காந்தியை சந்தித்து தமிழ்நாடு அரசியல் சூழல், தொகுதிகள் எதிர்பார்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..