நாய் கடித்ததில் மகன் உயிரிழப்பு.. மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம்..!
ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினம் மாவட்டம், பீமலி மண்டலம், எகுவபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிங்க ராவ் (55). பஸ் போக்குவரத்து ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு பார்கவ் என்கிற 23 வயது மகன் இருந்தார். மேலும், இவர்களது வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். இந்த நாயுடன் விளையாடி கொண்டிருந்த போது, கடந்த மாதம் திடிரென பார்கவை கடித்துள்ளது.
இதனால் அவருக்கு ரேபிஸ்நோய் ஏற்பட்டு உடல் முழுவதும் பரவி பரிதாபமாக உயிரிழந்தார். மகனை இழந்த சோகத்தில் தந்தை நரசிங்க ராவும் உடல்நலம் பாதிக்கபட்டு எழுத்துக்க முடியாமல் இருந்தார்.
இந்தநிலையில்,நேற்று மன உளைச்சலின் உச்சிக்கு சென்ற அவர் அந்த சோகத்திலேயே உயிரிழந்தார். வளர்ப்பு நாயால் மகனை இழந்த துக்கமே தீராத நிலையில் அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்