மதுபழக்கத்திற்கு அடிமையான மகன்.. வேதனையில் தாய் எடுத்த விபரீத முடிவு..!
ஈரோடு, ஈபிபி நகா், ஜனதா காலனியைச் சோ்ந்தவா் காவேரி (60) என்பவர் தனது கணவா் தேவராஜன் (67) மற்றும் மகன் துரைராஜ், மருமகள் தீபா, பேரன் ஆகியோருடன் வசித்து வந்தாா். லாரி ஓட்டுநரான துரைராஜ் மது பழகத்திற்கு அடிமையாகி உள்ளார்.
இதனால் வேலைக்கு சென்று அதில் வரும் பணத்தை முழுவதும் மது வாங்கி குடித்து வந்துள்ளார். இதனை தாய் காவேரி பலமுறை கண்டித்தும் கேட்காமல் மது அருந்தி வந்துள்ளார்.
மகனின் மதுப் பழக்கத்தால் மனஉளைச்சலில் இருந்த காவேரி, தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அங்கிருந்த மரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட தேவராஜின் சகோதரியான ராஜாமணி, அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினா் உதவியுடன் காவேரியை மீட்டு ஈரோடு அரசுத் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு காவேரியை பரிசோத்தித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்