அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை பற்றி அவதூறாக பேசி சி.வி.சண்முகம் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.. அது தொடர்பாக திமுக பிரமுகர் திண்டிவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக இடையே மோதல் ஏற்பட்டது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திண்டிவனம் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்..
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரணை செய்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் “ஜான் சத்யன்” சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.. என திமுக நிர்வாகி அளித்த புகார் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அதனை திமுக அரசு தான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என கூறினார்..
அதற்கு எதிர்தரப்பில் பேசிய வழக்கறிஞர்., சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது.. அவரது பேச்சை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறியுள்ளார் அதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. ,
அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கூறினார். வேறு பிரிவு ஏதேனும் பொருந்தும் என்றால் அந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்வதாக கூறினார். இந்த வழக்கின் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..