கடன் பிரச்சனை தீர..! செவ்வாய்கிழமை இதை செய்து பாருங்க..!!
கடன் இல்லாமல் வாழவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் கட்டாயம் கடன் வாங்க வேண்டும் என்ற சூழலுக்கு ஆளாக்கப் படுகிறோம். அப்படி நாம் கட்டாய சூழலில் வாங்கப்படும் கடன் ஒரு சில சமையம் திருப்பி கொடுக்க முடியாமல் அதிக சுமை ஆகிவிடுகிறது.., இந்த கடன் பிரச்சனை தீர என்னதான் முடிவு..? அதற்கான தீர்வு குறித்து பார்க்கலாம்.
வாரந்தோறும் செவ்வாய் கிழமை அன்று முருகப்பெருமானையும்.., பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாய் கிழமை அன்று மங்களகரமான பொருள்களை வாங்கினால்.., பன்மடங்கு பெருகுவதோடு எல்லாச் சிறப்புகளும் நம்மை தேடிவரும்.
கடன் பிரச்சனைக்கு ஆளாகி இருப்பவர்கள்.., செவ்வாய் கிழமை அன்று கடனை திருப்பி கொடுத்தால் சீக்கிரமே கடன் தீர்ந்துவிடும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படாது என்று சொல்லுகின்றனர்.
கடனை திருப்பி கொடுக்கும் முன்.., முருகர் கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைத்து விட்டு சென்றால்.. மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படாது..,
Discussion about this post