தீவிரமாகும் மணிப்பூர் கலவரம்..! அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பைரோன் சிங் எடுத்த முடிவு..?
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பாலும் மெய்டி சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரான கூகி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட இடஒதிக்கீடு பிரச்சனையால், மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
இந்த வன்முறை பிரச்சனையை சரி செய்வதற்காக.., மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அனைத்து கட்சிகளிடையே கூட்டம் ஒன்றை நடத்தினார். அதற்காக மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் நேற்று முன்தினம் சந்தித்துள்ளனர்.
இந்த வன்முறை குறித்து முதல்வர் பைரோன் சிங் கூறுவது, மணிபூரில் நிலவும் வன்முறை குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கியுள்ளேன். மணிப்பூரில் நிலவரம் குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூடு, மற்றும் பள்ளத்தாக்கு வேதனை குறியது,
ராணுவம் மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுப்பது.., உயிரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வந்தாலும்.. அவற்றை வழிமறிப்பது, போராட்டம் தொடர்ந்து நடத்துவது.., இதை யார் என்று கண்டு பிடிக்க முயன்றால்.., வன்முறை காரணத்தை திசை திருப்புவது.., மிகவும் வேதனை குறிய ஒன்று.
இந்த பிரச்சனை களை முடிவிற்கு கொண்டு வர பல திட்டங்கள் வைத்துள்ளோம், அதை சொல்லுவதை விட செயலாக செய்ய போகிறோம் என அவர் தெரிவித்தார்.