“சமூகநீதி நாள்..” அமைச்சர்கள் உறுதிமொழி..!! முப்பெரும் விழா கொண்டாட்டம்..!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாளில் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அண்ணாசிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அந்த வகையில் நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைதொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அண்ணாவின் பிறந்தநாளும்., செப்டம்பர் 17ம் தேதி தந்தை பெரியார் பிறந்தநாளையும்., மற்றும் செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளை கொண்டாடும் விதமாக நேற்று முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.. திமுக கட்சி தொடங்கி 75வது ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த முப்பெரும் விழாவை கொண்டாடும் விதமாக நாளை சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக முப்பெரும் விழா கொண்டாடப்படவுள்ளது அதே சமயம் இந்த ஆண்டு கழகத்தின் பவள விழா ஆண்டாக இருப்பதால் திமுகவின் சடமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரது வீடுகளிலும் கட்சி கொடியை ஏற்றி வைத்து கொண்டாடும்படி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்…
அதன் படி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியை வாசித்தார். இந்த நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..