புதினா நீரில் இவ்வளவு நன்மைகளா?
கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க சிறந்த பானங்களில் ஒன்று புதினா தண்ணீரும் ஆகும். புதினா என்பது நறுமணத்தில் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
அது மட்டும் இல்லாமல், அதன் தண்ணீரை குடித்து வந்தால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். உடலை நீர் சத்துடன் வைத்துக் கொள்ள புதினா நீர் உதவுகிறது.
இப்படிப்பட்ட புதினா நீரை குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
செய்முறை :
புதினா நீர் என்பது புதினாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பிறகு காலை எழுந்தவுடன் அதை வடிகட்டி வெறும் வயிற்றில் பருகுவது புதினா நீர் எனப்படும்.
1. செரிமான கோளாறுகள் இருப்பவர்கள் புதினா நீரை உணவுடன் சேர்த்து பருகிவர செரிமான பிரச்சனையும் சரியாகும். வாயு தொல்லை, வயிறு உப்புசம் போன்றவற்றை தடுக்கும்.
2. மன அழுத்தத்தை குறைக்க புதினா சிறந்த மருந்தாகும் .அது உடலை குளிர்வித்து, மனதையும் அமைதியாக்கும் திறன் கொண்டது.
3. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் கிரீன் டீ, பிளாக் டீ போன்றவற்றை குடித்து வருவார்கள். ஆனால் புதினா நீரை குடித்தால், வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். இதனால் அதிக அளவு சாப்பிடுவது கட்டுப்படும். உடல் எடை குறையும்.
4. புதினாவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் கள் அதிகம் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெளியிலிருந்து நோய்க் கிருமிகள் நம் உடலை தொற்றாதவாறு பாதுகாக்கும்.
5. புதினா சருமத்திற்கு ஏற்ற ஒரு பொருளாகும். புதினாவில் விட்டமின் ஏ மற்றும் சாலிசிலி அமிலம் உள்ளது. இது முகத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் முகப்பருக்களை குறைக்க உதவுகிறது.
6. புதினா தண்ணீரை தினசரி அருந்தி வந்தால், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றலாம் இதனால் சருமமும் , உடலும் ,உடல் உறுப்புகளும் புத்துணர்வோடும் பாதுகாப்பாக இருக்கும்.
– நிரோஷா மணிகண்டன்