மாலை நடை பயிற்சியில் இவ்வளவு நன்மைகளா?
பொதுவாக நமது அன்றாட வாழ்வில் நடை பயிற்சி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. பெரும்பாலானோர் காலையில் நடை பயிற்சி மேற்கொள்வர். ஆனால் மாலையில் நடை பயிற்சி மேற்கொண்டால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
மாலையில் அலுவலகம் செல்பவர்கள் காலையில் நடைபயிற்சியை மேற்கொள்வார்கள். நேரமின்மையே அதற்கு காரணம். ஆனால் மாலையில் உடற்பயிற்சியை மாற்றுவது நல்லது, என்று சில மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த காலத்தில் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், வேலை பளு, குடும்ப சுமை போன்றவற்றால் நாம் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம். இதனால் பல உடல் நல கோளாறுகள் நம்மை அறியாமல் நமக்குள் வருகிறது. அதை தடுப்பதற்கான சிறந்த வழி மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்…
1. நம் உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க மாலை நடை பயிற்சி சிறந்தது
2. மாலையில் நடை பயிற்சி மேற்கொண்டால் நேர்மறையான விளைவுகள் கிடைக்கும்.
3 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால் நம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
4. மாலையில் நடப்பது இயற்கை மற்றும் நல்ல உணர்வு ஹார்மோன்களை அதிகரிக்கும் .
5. நடைப்பயிற்சி என்பது மனச்சோர்வை எதிர்த்து போராடும் நல் வாழ்வுக்கு வழிவகுக்கும்.
6. இரவு உணவிற்கு பிறகு நடைப்பயிற்சி கூடுதல் கலோரிகளை எரிக்கவும், எடை நிர்வாகத்தை ஆதரிக்கவும் உதவும் . நடைப்பயிற்சி அதிகப்படியான கலோரி கொழுப்புகளை சேமித்து வைப்பதை தடுத்து ஆரோக்கியமான உடலை கொடுக்கிறது .
7. மாலையில் நடை பயிற்சி விறுவிறுப்பான தசைகளையும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பளப்படுத்துகிறது. ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கத்துக்கும் புத்துணர்வு கிடைக்கும் .
8. மாலை நேர நடை பயிற்சி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. முதுகு வலிக்கு மாலை நடை பயிற்சி சிறந்ததாகும்.
10 கடினமாக உழைத்து விட்டு வீட்டிற்கு வருபவர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு தூங்குவதன் மூலம் நல்ல தூக்கத்தை பெற முடியும். தூக்கம் நன்றாக இருந்தால் உடல்நிலை சீராகஇருக்கும் .
11. நடைப்பயிற்சியை மொட்டை மாடிகளில் செய்வதை தவிர்க்கவும் . வெளி இடங்களில் அல்லது பூங்காக்களில் மேற்கொள்வது மேலும் பல்வேறு நன்மைகளை கொடுக்கும்.
12. நடைபயிற்சியின் போது மற்ற சிறு சிறு உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
– நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..