பப்பாளியில் இவ்வளவு நன்மைகளா…!
பப்பாளி என்பது சுவையான மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பழமாகும். இதில் அதிகப்படியான விட்டமின்கள் பாப்பையின் போன்ற நார்ச்சத்துக்கூறுகள் உள்ளது. பப்பாளி பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடுவதற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த நன்மை பயக்கும். பப்பாளியை நம் உணவில் பலவகையில் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் வெறும் வயிற்றில் உட்கொள்வது இன்னும் பல நன்மையை தரும். பப்பாளியின் நன்மைகளை பார்ப்போம்.
1. பப்பாளி முதலில் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இதயத்தில் ஏற்படும் கோளாறுகளை குறைக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அளவை குறைக்கும் மற்றும் பக்கவாதத்தை தடுக்க சிறந்த நிவாரணையாகும்.
2. உடல் எடையை குறைக்க நினைப்போர் பப்பாளியை உண்ணலாம் ஏனென்றால் பப்பாளையில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் இது உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது மற்றும் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய ஒரு உணர்வை தருகிறது. நம்மை குறைவாக சாப்பிட வைத்து எடை குறைக்க உதவுகிறது.
3. பப்பாளியில் விட்டமின் சி உள்ளதால் அது நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கும் ஊட்டச்சத்து ஆகும். விட்டமின் சி உடலில் எடுத்துக் கொள்வதால் உடலை நோய் தொற்றுகள் மற்றும் நோய்க் கிருமிகளில் இருந்து பாதுகாக்க உதவும். நோய் தொற்றுகளை எதிர் கொள்ள நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அது பப்பாளியில் அதிகம் உள்ளது .
4. பப்பாளியில் இருக்கும் பாப்பைன் என்ற நொதி செரிமானத்தை மேம்படுத்த சிறந்தது. இதன் காரணமாக உணவு எளிதில் செரிமானம் ஆகிறது. பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் நொதி மிகவும் திறம்பட செய்கிறது. மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் தரும் .
5. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பப்பாளி மிகவும் சிறந்தது. பப்பாளி சாப்பிடுவதன் மூலம் முகப்பரு கட்டிகள் போன்ற வற்றை தடுக்கும். நம் தோல், முகம் பளபளப்பாக ஆரோக்கியமாக இருக்க தினமும் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிடுவது நல்லது .
6. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பப்பாளியை சாப்பிடலாம். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
7. பப்பாலி கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. உடலில் ரத்தத்தை அதிகரிக்க சிறந்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை பப்பாளியை பழமாகவோ அல்லது பழசாராகவோ சாப்பிடலாம். தினசரி உணவில் சேர்த்துக் கொண்டாலும் பெரிதும் நன்மை பயக்கும்.
– நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..