சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு..! ஹேம்நாத்க்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு..?
சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் நிரபராதி என திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நடிகை சித்ரா சின்னத்திரையில் பிரபலம் என்றாலும்.., ஒரு ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த பெண் பல்வேறு நாடகங்களில் நடித்திருந்தாலும்.., பல மேடைகளில் நடனம் ஆடி இருந்தாலும் இவருக்கு என்று ஒரு அடையாளம் கொடுக்கப்பட்ட ஒரு சீரியல் என்றால் அது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற சீரியலில் குமரனுக்கு ஜோடியாக முல்லை கதா பாத்திரத்தில் நடித்து இருப்பார்..,
அவரின் அந்த நடிப்பு ஒவ்வொரு இல்லங்களிலும் சித்ராவை மகளாக கொண்டு போய் சேர்த்தது.. தன்னுடைய இலக்கு எதுவோ அதை நோக்கிய பயணித்த அந்த சித்ராவின் திடீர் மரணம் பேர் அதிர்ச்சியை கொடுத்தது..
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாகமீட்கப்பட்டார். இந்த சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி ரேவதி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.இதற்காக, சித்ராவின் கணவர் ஹேம்நாத் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என கூறி அவரை விடுதலை செய்து நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..