தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறு..! சாட்டை துரைமுருகன் கைது..!
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் இன்று திருச்சி காவல்துறையினரால் குற்றாலத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு பற்றி அவதூறாக பேசி சமூக வலைதளங்களில்.., அவதூறு பரப்பிய சாட்டை துரைமுருகனை தஞ்சாவூர் போலீஸார் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்தனர்.

பின்னர். இனிமேல் யாரை பற்றியும் அவதூறு பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் மதுரை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. அதனை பொருட்படுத்தாத துரைமுருகன் அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி கைது செய்யப்பட்டு மீண்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கடந்த ஜூலை 8ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன் அப்போது திமுக தலைவர்கள் குறித்து, குறிப்பாக மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
அதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் பெயரில் திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் துரைமுருகனை கைது செய்துள்ளனர். குற்றாலத்தில் இருந்து சாட்டை துரைமுருகன் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்து வர இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..