நபிகள் நாயகம் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகி கைது..
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அன்புவேல் மற்றும் பாஜக ஊடக துறை செயலாளர் நந்தகுமார் ஆகியோர், இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக கருதும் நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து, அவதூறான கருத்துக்களை முகநூலில் பரப்புவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் அனைத்து சமூக மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ்ந்து வரும் நிலையில், அமைதி பூங்காவான தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தவும், திமுக ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்கவும் பாஜக.வினர் திட்டமிட்டு இத்தகைய செயலில் ஈடுபடுவதாக தமுமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்த அவர்கள், மதப்பிளவையும், பதற்றத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கோவை சைபர் கிரைமில் கொடுக்கப்பட்ட புகார் வழக்கில் கோவை மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் வைத்து, கோவை சைபர்கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்