சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து….. அதிகரித்து வரும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை….!
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் மே 9 ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்ப்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து சிவகாசி ரிசர்வ் லைன் மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), மத்தியசேனையை சேர்ந்த செல்வம் மனைவி இந்திரா(48) ஆகியோர் உட்பட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரா சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”