டிரில்லியன் நிறுவனத்துடன் கையெழுத்தான ஒப்பந்தம்..!! முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு..!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈற்பதற்காக அமெரிக்க அரசு முறை பயணம் சென்றுள்ளார்.. அமெரிக்க சென்ற நாளில் இருந்து ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வருகிறது..
முன்னதாக தமிழ்நாட்டில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக 900 கோடி ரூபாய் முதலீட்டில் பேபால், நோக்கியா, மற்றும் மைக்ரோசிப் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.., அதன் பின் 400 கோடி ரூபாய் முதலீட்டில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடனும் 5௦௦ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது..
நேற்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தியை பெறுக்கும் வகையில் கையெழுத்திடப் பட்டுள்ளது..
இந்நிலையில் இன்று அமெரிக்கா சிகாகோவில் உள்ள “அஷ்யூரன்ட், ஈட்டன்” போன்ற முதன்மை நிறுவனத்தின் CEO-வை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான திட்டம் குறித்து ஆலோசித்துள்ளார்., அதன் பின்னர் 2௦௦ கோடி ரூபாய் முதலீட்டில் 5௦௦ பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டமானது கையெழுத்தானது..
அதன் பின்னர் சென்னையில் ஏ.ஐ.ஆய்வகம் அமைப்பதற்கான கூகுள் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.., அதனை தொடர்ந்து அமெரிக்காவின் புகழ்பெற்ற டிரில்லியன் நிறுவனத்துடன் 2௦௦௦ கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது..
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருபதாவது.. “சிகாகோவில் அற்புதமான முன்னேற்றங்கள்.. டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ₹2000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அலகு மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழ்நாட்டில் நிறுவியது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி..
Nike உடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு உருவாக்கம்/வடிவமைப்பு மையத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுக்களை நடத்தியது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 5,000 பேர் வேலை செய்து வரும் Optum உடன் ஈடுபட்டுள்ளது மற்றும் சுகாதாரத் துறைக்கான திறமைக் குழாய்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
திருச்சி மற்றும் மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.. வேகம் வலிமையானது. என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..