“மதச்சார்பின்மையின் அடையாளம் வ.உ.சிதம்பரம் பிள்ளை” எம்.பி.துரைவைகோ மரியாதை..!!
மதச்சார்பின்மையின் அடையாளமாகத் திகழ்ந்தார் வ.உ.சிதம்பரம் பிள்ளை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ புகழாரம் சூட்டி உள்ளார்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதன் முதலில் சுதேசிக் கப்பலை இயக்கிய, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் 153 -வது பிறந்த நாளில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, வைணவம், பௌத்தம், இசுலாம், கிறிஸ்தவம் மதம் சார்ந்த நூல்களை எழுதி அன்றைக்கே மதச்சார்பின்மையின் அடையாளமாகத் திகழ்ந்தார் வ.உ.சிதம்பரம் பிள்ளை என புகழாரம் சூட்டினார். மேலும் அவருடைய தொண்டும், புகழும் தமிழர்கள் இதயத்திலும், இந்தியர்கள் இதயத்திலும் என்றும் நிலைத்து நிற்கும் என்றார்
இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயசீலன் உள்ளிட்ட மதிகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..