“சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்..” தொடரும் போராட்ட..!! சித்தராமையா அளித்த பதில்..?
முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேலும் நான் முதல்வராக இருந்தபோது நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை. பாஜக ஆட்சி காலத்தில் தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம் இந்த முறைகேடு விவகாராத்தில்.., முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத எதிர்கட்சிகள், “முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வந்த நிலையில் அது தொடர்பாக பெங்களூர் வழக்கறிஞர் பிரதீப்குமார், லோக் அயுக்தாவில் புகார் கொடுத்துள்ளார்.., அதனிடையே வழக்கறிஞர் பிரதீப் குமார், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூர் சினேகமயி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து சித்தராமையாவிற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டுள்ளனர்.
பின்னணியில் முதலமைச்சர் சித்தராமையா விற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க கோரி ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் பின்னணியில் முதலமைச்சர் சித்தராமையா விற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க கோரி ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து ஆளுநர் கெலாட்டை வழக்கறிஞர் பிரதீப் குமார், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூர் சினேகமயி கிருஷ்ணா ஆளுநரை சந்தித்து கொடுக்கப்பட்ட உத்தரவின் நகலை மீண்டும் திரும்ப பெற்றுள்ளனர். அதனை கர்நாடகா மாநில தலைமைச் செயலாளரிடமும் கொடுத்துள்ளனர்.
எனவே கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.பிரதீப் குமார், டி.ஜே.ஆபிரகாம், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் அளித்த மனுக்களின் பேரில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடுக்க, அந்த மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி அனுமதி வழங்கினார்.
ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமையா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா நேற்று முன்தினம் உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
அந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா மீது.., கர்நாடக லோக் ஆயுக்தா மைசூரு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்..
மேலும் சித்தராமையா முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, “நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்.
நான் ஏன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்..? மத்திய அமைச்சர் குமாரசாமி மீதும் வழக்குகள் உள்ளன. அவர் ராஜினாமா செய்வாரா? அவர் முதலில் விலகட்டும், பிரதமர் மோடி அவரின் ராஜினாமாவை ஏற்கட்டும்.”என
இவ்வாறே முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறே அவர் பேசினார்..