பழனி பஞ்சாமிர்தம் அவதூறு வழக்கு..!! பாஜக பிரமுகருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..!!
பழனி பஞ்சாமிர்தத்திலும் விலங்கு எண்ணெய் கலக்கப்பட்டிருப்பதாக அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்த பாஜக நிர்வாகி செல்வகுமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு., மற்றும் மீன் எண்ணெய் போன்ற விலங்கு கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.. பின்னர் அது உறுதி செய்யப்பட்டு.., பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது..
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.., அதாவது பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் விலங்கு எண்ணெய்கள் கலந்து இருப்பதாக மற்றொரு சர்ச்சை வெளியாகியுள்ளது..
அதாவது திருப்பதி தேவஸ்தானதிற்கு நெய் விநியோகம் செய்த அதே நிறுவனம் தான் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் வாங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் சில அவதூறு பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார்..
அதற்கு கோவில் நிர்வாகம் அளித்த பதலில் கூறியிருப்பதாவது.., “பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்காக வாங்கப்படும் நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்குவதாகவும் அதற்கான சான்றிதழ்களையும் காண்பித்துள்ளது..
அதன் பின் பொய்யான தகவல்களை இணையத்தில் பதிவிட்டதற்காக கோவில் நிர்வாகிகள் பழனி காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோஜ் பி செல்வம் மீது புகார் அளித்துள்ளனர்..
அந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் கோவையைச் சார்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்..
அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வக்குமார் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியதாவது.., “ஒரு கருத்தை சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்யும் முன் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். உடனடியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும். மேலும் ஒரு உணவு பொருளின் தரத்தை அறியாமல் அதன் தன்மையை உணராமல் தவறான கருத்தை பதிவிட்டாதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்..
மேலும் பொறுப்பற்ற முறையில் செல்வகுமார் நடந்தால் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட நேரிடும். வாய்ச்சொல் வீரராக இல்லாமல் நிஜத்தில் சேவைகளை செய்யவேண்டும். பாஜக பிரமுகர் செல்வகுமார் தனது செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். காவல் நிலையத்தில் தவறாமல் கையெழுத்திட வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..