டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு..!! கைது செய்யப்பட்ட நபர்..? கமலா ஹாரிஸ் போட்ட ட்வீட்..!!
அமெரிக்க டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது..
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பாம் பீச் பகுதியில் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான கோல்ஃப் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது..
கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களிடம் இருந்து அவரை காப்பாற்றுவதற்காக பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அப்போது ட்ரம்ப் காதில் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ஆகியோர் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபரும் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது
டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் பற்றி எந்த ஒரு விவரம் தெரியாததால் அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. தற்போது அவர் பாதுகாப்பாக இருக்கிறார்.. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது
அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு இடமே இல்லை அவரின் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து அவரிடம் மத்திய சட்ட அமலாக்கப் பிரிவு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..