ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்..! வாக்குமூலம் கொடுத்த கைதி..!
சென்னையை பெரம்பூர் செம்பியம் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். நேற்று இரவு தனது மொபைலில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதன் பின் தனது கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தபோது, உணவு டெலிவரி செய்வதை போல வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அவர் கொலை செய்யப்பட்ட 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை முடிந்தும் அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனை அடுத்து ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளிலோ அல்லது நினைவு நாள் வருவதற்கு முன்பு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் ஆற்காடு பாலு தீவிரமாக திட்டம் தீட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் முன்பு கொலை செய்யப்பட்ட இறந்த ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளையொட்டி நேற்று இரவு ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்யப்படுவதாக ஆற்காடு பாலு போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பின் அவரது தம்பி ஆற்காடு பாலு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மற்றும் ஜெயபால் என்பவர் தொடர்ந்து மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், பாலுவின் மனைவி அவரை பிரிந்து சென்றுள்ளார்.
அண்ணன் கொலை செய்யப்பட்டதை, மனைவியும் பிரிந்து சென்றதால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான ஆற்காடு பாலு, இதற்கு காரணமான ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், கன்னிகாபுரம் தென்னரசு கொலை வழக்கில் ஆற்காடு பாலு சிறையில் இருந்த போது, அவருடன் நட்பாக பழகியவர்களையும் இதில் சேர்த்துள்ளார்.
அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்ற புலனாய்வு துறை மூலம் மூன்று முறை செம்பியம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் இந்த தகவலை காவல்துறையினர் பொருட்படுத்தாமல் இருந்ததால், இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கொலையாளிகள் கடந்த சில நாட்களாக ஆம்ஸ்ட்ராங்கின் நடமாட்டத்தை தீவிரமாக நோட்டமிட்டு அவர் எப்போது தனியாக இருப்பார் என்பதை நன்கு அறிந்து கொண்டு. பின் நேற்றிரவு உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போலச் சென்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக வன்மம் வைத்து 2 வாரமாக ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு இந்த கொலை சம்பவம் நடந்தது காவலர்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ