ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்..! தொடரும் ஆர்ப்பாட்டத்திற்கு காரணம்..?
சென்னையை பெரம்பூர் செம்பியம் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். நேற்று இரவு தனது மொபைலில் உணவு ஆர்டர் செய்துள்ளார் . அதன் பின் தனது கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தபோது, உணவு டெலிவரி செய்வதை போல வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பின் இதனை கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
அவர் கொலை செய்யப்பட்ட 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை முடிந்தும் அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உளவுத் துறை ஏடிஜபியைக்கு மாற்ற வேண்டியும், ஆம்ஸ்ட்ராங் உடலை பொது இடத்தில் மக்கள் பார்வைக்காக வைத்து அஞ்சலி செலுத்திய பின் அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், இரயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் ஆதரவாளர்கள் சமாதானம் ஆகாததால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில், ஆம்ஸ்ட்ராங் உடலை அவரது குடும்பத்தினர் பெற்று கொண்டனர். ஆனால் அவரது உடலை ஊர்வலமாக கொண்டு செல்வோம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டு. சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து இடையூறுகளை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பின் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை மீண்டும் கீழே இறக்கி வைத்து.. அவரது ஆதரவாளர்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..