நடிகர் திலகம் மகன் கூட்டத்தில் இப்படியா பண்ணுவாரு..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 வது பிறந்தநாளான இன்று அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த சிவாஜியின் மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு ஆகிய இருவரும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமார் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கோபத்துடன் ஒரு நபரை குத்தும் காட்சி வெளியாகி அதிக பரப்பரப்பை கிளப்பியுள்ளது.
சிவாஜி மகனான ராம்குமார் விக்ரம் நடித்த படமான ஐ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் பல படங்களையும் தயாரித்து உள்ளார்.
சிவாஜி அவர்கள் விழுப்புரத்தில் 1928 ல் பிறந்து நாடங்களில் சத்ரபதியாக நடித்த நிலையில், அவர் சிவாஜி கணேசனாகவே சினிமாவில் பிரபலம் அடைந்துள்ளார். அப்படி உலகளவில் சினிமா கலைஞர்கள் மற்றும் பொதுமக்களால் போற்றப்பட்ட சிவாஜி கணேசன் 2001 ல் ஜூலை 21 ஆம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். இன்று அக்டோபர் 1 ஆம் தேதி அழியா புகழுக்கு சொந்தமான சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
சிவாஜி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் தான் சிவாஜியின் மகன் ராம்குமார் கோபமடைந்துள்ளார்.
சிவாஜியின் இரண்டாவது மகனான இளைய திலகம் பிரபு அவர்கள் இயக்குநர் மகா கந்தன் இயக்கத்தில் நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தின் புரமோஷன் போஸ்டருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் மேடையில் ராம்குமாருக்கு பின்னாடி இருந்த நபர் அவரை முந்தி முன்னே வர முயற்சித்த நிலையில், ராம்குமார் அவரை அடித்து விட்டதாக நினைத்து முட்டியை மடக்கி ஓங்கி குத்தினார். இதனை பார்த்த பொதுமக்கள் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் நிகழ்ச்சியில் இப்படியா ஆவேசமாக நடந்துக்கொள்வார் என அனைவரும் பேசி வருகிறார்கள்.