குபேரன் வழிபட்ட சிவலிங்கம்..! ஒரு முறை தரிசனம் செய்தால் கிடைக்கும் பலன்..!!
சிவபெருமான் பார்வதி தேவியின் திருமணத்தின் போது, சிவபெருமானின் கட்டளைக்கு இணங்க அகத்திய முனிவர் “தென்னாட்டிற்கு” வந்து சேர்ந்தார். அப்போது பொதிகை மலையில் அமர்ந்து தவம் புரிந்தார்.., அகத்திய பெருமானுக்கு ஈசன் தன் திருமணக் கோலத்தை எண்ணற்ற தளங்களில் அருளினார். 200 ஆண்டுகளுக்கும் மேல் புகழ் பெற்ற இக்கோவில் அகத்திய முனிவரால் மிகவும் பிரசித்தி பெற்றது.
கடன் தொல்லை இருபவர்கள் செல்வம் வளம் வேண்டும் என நினைப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து குபேரனுக்கு பூஜை செய்து வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கி விடும். மேலும் பணவரவு அதிகரிக்கும். வெளிச்சுற்று பிரகாரத்தில் சனீஸ்வரனின் மனைவி “ஜோஷ்டா தேவி” தனது மைந்தனின் மாந்தியை மடியில் வைத்துக்கொண்டு சந்ததி கொண்டிருப்பாள்.., சாதாரணமாக ஜோஷ்டா தேவியை மற்ற சிவன் ஆலயங்களில் பார்க்க முடியாது. இக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே ஹரிகேசவநல்லூர் அமைந்துள்ளது.
கடந்த ஜூலை 2, 3 மற்றும் 4 ம் தேதி யாக சாலை பூஜையும் ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெற்றது. மிக சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஜோஷ்டா தேவி பெரிய திருவுருவத்துடன் சந்ததி கொண்டுள்ளார். இக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் சகல சங்கடங்களும் நீங்கி விடும். மேலும் சனீஸ்வரனின் பரிகார தளமாகவும் இருப்பதால், சனிதோஷம் இருப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஒரு திருத்தலம் என்று சொல்லப்படுகிறது.
வடக்கு திசையில் அமர்ந்து இருக்கும் குபேரனை வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும் என்பது உண்மை. வலக்கையில் கதையை ஏந்தி இடக்கையை மடித்து காலின் மீது வைத்து கொண்ட 4 அடி உயரம் கொண்ட இவரை காண ஏராளமான பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்குமாம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள், செய்திகள், திருத்தலங்கள், மற்றும் பரிகாரங்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.