தாகத்திற்கு தண்ணீர் கேட்ட வாலிபர்… உதவி செய்த பெண்ணிற்கு அரங்கேறிய கொடூரம்..!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலை கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (28). இவர் அருகே உள்ள வனப்பகுயில் விறகு சேகரிக்க சென்றுள்ளார. அப்போது அங்கிருந்த 45 வயதுள்ள பெண் ஒருவரிடம், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு உள்ளார்.
அதனையெடுத்து அந்த பெண் தண்ணீர் கொண்டு வர வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்த சிவக்குமார் அவரது வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சிவகுமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்