‘அவள்ளாம் டைம்பாஸ்’- நடிகை ரேகாவின் மனதை உடைத்த அந்த வார்த்தை
நடிகை ரேகா 60 வயதுக்கு மேல் ஆகி விட்டாலும் இளமை மாறாதவர். 25 வயதில் எப்படி அழகாக இருந்தாரோ, அதே போலவே இப்போதும் இளமை குன்றாமல் இருப்பவர். நடிகர் ஜெமினி கணேசனின் மகளாக இருந்தாலும் தமிழ்ப்படங்களில் நடித்தது இல்லை. பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து பிரபலமானாவர். இவரும் அமிதாப்பச்சனும் பாலிவுட்டில் உச்சக்கட்டத்தில் இருந்த போது காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஆனால், அமிதாப்புடனான காதலுக்கு முன்னரே, நடிகர் ஜிஜேந்திராவை நடிகை ரேகா ஆழமாக காதலித்தார். அந்த காலக்கட்டத்தில் இருவரும் சேர்ந்து 30 பாலிவுட் படங்களில் நடித்திருந்தனர். பாலிவுட்டின் மிக அழகான ஹேண்ட்சம் ஜோடியாக பார்க்கப்பட்டனர்.
ஜிதேந்திராவின் காதலை நடிகை ரேகாவும் உண்மை என்றே நினைத்திருந்தார். ஒரு முறை ‘எக் பெச்சாரா’ என்ற இந்தி படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இருவம் ஜோடியாக நடித்தனர். படபிடிப்பின் போது, நடிகை ஜிதேந்திரா துணை நடிகை ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த நடிகை ரேகாவுடனான காதல் பற்றி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, பதலளித்த ஜிதேந்திரா, அவள்ளாம் சும்மா, டைம் பாசுக்கு என்று அலட்சியமாக கூறியுள்ளார். இந்த சமயத்தில் அங்கு வந்த நடிகை ரேகா ஜிதேந்திராவின் பேச்சை ஏதோச்சையாக கேட்டு விட்டார். ஜிதேந்திராவின் இந்த அலட்சியப் பேச்சு நடிகை ரேகாவின் மன சுக்கு நுறாக உடைத்து விட்டது. விறு விறுவென்று மேக்கர் அறைக்கு ஓடி சென்ற ரேகா கதவை பூட்டிக் கொண்டு பல மணி நேரம் அழுதுள்ளார். பின்னர், தீர்க்கமான முடிவுடன் வெளி வந்த அவர், அன்றைய தினமே ஒரு முடிவெடுத்தார். ஜிதேந்திராவுடனான உறவை முறித்தும் முடித்தும் விட்டார்.
இந்த தகவல் நடிகை ரேகா பாற்றி பத்திரிகைளாயர் யாஷிர் உஸ்மான் எழுதி யஅன்டோல்டு ஸ்டோரி பயோகிராபியில் கூறப்பட்டுள்ளது.
சில காலத்துக்கு பிறகு நடிகை ரேகா மீண்டும் ஒரு முறை காதல்வயப்பட்டார். இந்த முறை சினிமாத்துறையை சேர்ந்தவரை அவர் காதலிக்கவில்லை. டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை காதலித்து 1990ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்தார். ஆனால், இந்த திருமணமும் 6 மாதம் கூட நீடிக்கவில்லை, முகேஷ் அகர்வால் தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு பிறகே, நடிகை ரேகா அமிதாப்புடன் காதலில் விழுந்தாக சொல்லப்பட்டது. ஆனால், அப்போதே அமிதாப் நடிகை ஜெயா பச்சனை காதலித்து திருமணம் செய்திருந்தார். இரு குழந்தைகளும் இருந்தன. இதனால், இந்த காதலும் கைகூடவில்லை. சினிமாவில் உச்ச நாயகியாக வலம் வந்தாலும் அழகு மங்காத மங்கையாக இருந்தாலும், நடிகை ரேகாவின் சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவும் மர்மம் நிறைந்ததாகவுமே இருந்துள்ளது.