ADVERTISEMENT
கர்ப்ப காலத்தில் வரக்கூடிய பொதுவான உடல்நல பிரச்சனைகள்…
ஒரு பெண் கர்ப்பமாவது என்பது மிகப்பெரிய இயற்கையின் அதிசயமே.. இவ்வாறு கர்ப்பகாலத்தில் பெண்கள் சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இப்போது அவற்றை பற்றி பார்ப்போமா..
அசிடிட்டி : கர்ப்ப காலத்தில் அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் ஆகிய தொந்தரவுகள் வரக்கூடும். சிட்ரஸ் பழங்கள், காரமான உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு இரவில் சீக்கிரம் சாப்பிடுவது, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து உறங்குவது, படுக்கும் போது தலையை சிறிது உயரத்தில் வைத்து படுப்பது ஆகியவற்றை பின்பற்றி வந்தால் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் இருக்காது. முதல் மூன்று மாதம் நல்ல தூக்கம் , ஓய்வு எடுப்பது அவசியம்.
முதுகு வலி : கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாவதால் பெண்களுக்கு முதுகு வலி வரக்கூடும். கர்ப்ப காலத்தின் ஆரம்ப நிலையிலே சரியாக அமர்வது, படுக்கும்போது உட்காரும்போது தலையணைகளை வைத்துக் கொள்வது, ஆகியவை நல்ல மாற்றத்தை தரும்.
கால்களில் வீக்கம் : இக்காலக்கட்டத்தில் கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்ப்படும். இதற்கு சிறு சிறு உடற்ப்பயிற்சி செய்யலாம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல் : கர்பமாக இருக்கும் காலத்தில் முதல் மற்றும் கடைசி மூன்று மாதங்களில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை அதிகமாக இருக்கும். அன்றாடம் குறைந்தது மூன்று லிட்டர் என இரவு எட்டு மணி வரை பருக வேண்டும். எட்டு மணிக்கு பிறகு தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மலம் கழிப்பதில் பிரச்சனைகள் : கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அக்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்ப்படக் கூடும். இதற்கு அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும். திரவமான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
மனநிலையில் மாற்றம் : கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலை அடிக்கடி மாற்றம் தரக்கூடியது. சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும் சில நேரங்களில் மனச்சோர்வாகவும் இருப்பார்கள். மேலும் இதுகுறித்து தன் கணவரிடம் கலந்து வெளிப்படையாக பேச வேண்டும். மருத்துவரிடம் செல்லும்போது இதனை தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.