அவளும் பிரிவும் எழுத்து கிறுக்கச்சி கவிதை-15..!
பெண் அவளால் பேனா பிடித்தேன்
காதல் வந்ததால் கம்பன் ஆனேன்..
இடையில் இடையூறு பல வந்தது.
“பிரிவு” காதல் கொண்டவர்களையும்
பித்து பிடிக்க வைத்தது.
காகிதம் அதையும் காதல் கொண்டேன்..
என் அவளின் எண்ணிக்கை இல்லாத
அன்பு நிறைந்த கவிதை வரிகளால்..
– லோகேஸ்வரி.வெ