காதலின் வலி – எழுத்து கிறுக்கச்சி கவிதை-16..!
பிரிந்து சென்ற காதலில்..
உன் நினைவோடு வாழும் நான்..
முதல் பார்வையில் தோன்றிய காதல்..
இரண்டாம் பார்வையில் நட்பானது..
தயங்கி தயங்கி பேசினோம்..
நாட்கள் செல்ல செல்ல காதல் என்று புரிந்து கொண்டோம்..
உன்னில் நான் என்னில் நீ
என வாழ்ந்தோம்..
தேவதையாக என் வாழ்வில் வந்த உன்னை
என் இதயத்தின் துடிப்பாக பார்த்தேன்..
அதனால் ஏனோ இன்னும் என்னுள் துடித்து கொண்டு இருக்கிறாய்..
பிரிந்து சென்ற உன்னை..,
மறக்க முடியாமல் தவிக்கும் நான்..
வாழ்க்கையை மாற்றுவது இரண்டாவது காதல் என்றால்..
மனதின் ஆழத்தில் என்றும் இருப்பது தான் முதல் காதல்..
– லோகேஸ்வரி.வெ