ஐபிஎல் நாக் அவுட்டான அணி..! தற்போதையா கேப்டன் யார்..? இனி தோனி..?
ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட வேண்டும் என பல இளம் வீரர்கள் போட்டி போட்டு அதற்காக காய்களை நகர்த்தி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்தால் பெருமை, பணம் என அனைத்தும் கிடைக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அதே சமயம் ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்து அந்த அணி மோசமாக செயல்பட்டால் விழுகின்ற அடியும் அந்த கேப்டனுக்கு மட்டும்தான் இருக்கும். நடப்பு சீசனில் ஹர்திக் பாண்டியா அப்படிப்பட்ட ஒரு சிக்கலில் தான் மாட்டி இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு சீசனில் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிய முதல் அணி என்ற சோகமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இப்படி மோசமான ரெக்கார்டை படைத்த கேப்டன்கள் மற்றும் அணி எது என்பதை தற்போது பார்க்கலாம். ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
கேகேஆர் அணி கேப்டன் மெக்குல்லம் :
இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கில்கிறிஸ்ட் தான் முதல்முறையாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிய அணியின் கேப்டன் என்ற சோகமான சாதனையை படைத்தார். இதனை அடுத்து 2009 ஆம் ஆண்டு கேகேஆர் அணியின் கேப்டன் மெக்குல்லம் இருந்தபோது அந்த அணி முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியது.
இதை அடுத்து 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சங்ககாரா பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த போது அந்த அணி முதல்முறையாக தொடரை விட்டு வெளியேறியது. இதேபோன்று 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக சங்ககாரா இருந்தபோது அந்த அணி தொடரிலிருந்து வெளியேறிய முதல் அணி என்ற பெயரை பெற்றது.
2013 ஆம் ஆண்டு பாதியில் புனே அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் செயல்பட்டபோது அந்த அணி தொடரை விட்டு வெளியேறியது. 2014 ஆம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக கெவின் பீட்டர்சன் இருந்தபோது அந்த தொடரில் வெளியேறிய முதல் அணி என்ற பெயரை டெல்லி பெற்றது.
2015 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஜார்ஜ் பெய்லி இருந்தபோது தொடரை விட்டு வெளியேறிய முதல் அணி என்ற பெயரை அது பெற்றது.
2016 ஆம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருந்தபோது, தொடரை விட்டு வெளியேறிய முதல் அணி என்ற பெயரை பெற்றது.
2017 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்த போது தொடரை விட்டு வெளியேறிய முதல் அணி என்ற பெயரை பெற்றது.
2018 ஆம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் இருந்தபோது தொடரை விட்டு வெளியேறிய முதல் அணி என்ற பெயரை அது பெற்றது.
2019 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி தொடரை விட்டு முதல் அணியாக வெளியேறியது. 2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருந்தபோது தொடரை விட்டு வெளியேறிய முதல் அணி என்ற பெயரை பெற்றது.
2021 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் இருந்த போது அந்த அணி முதல் அணியாக வெளியேறியது.
2022 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோகித் சர்மா இருந்த போது முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியது.
2023 ஆம் ஆண்டு டெல்லி அணி டேவிட் வார்னர் கேப்டனாக தோனி இருந்தபோது தொடரை விட்டு வெளியேறிய முதல் அணி என்ன பெயரை பெற்றது. தற்போது இந்த சோகமான பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆக இணைந்திருக்கிறார்.
– வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..