மகாராஷ்டிராவில் தொடரும் பாலியல் வன்கொடுமை..!! பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள்..!!
மகாராஷ்டிர மாநிலம் பத்லாப்பூர் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது., இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்., அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் பெற்றோர் சிறுமி படிக்கும் பள்ளியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளரார் ஒருவர் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது., குழந்தைகளின் உடல்நிலை மிகவும் மோசமானதால் இச்சம்பவம் குறித்து விவரம் அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அறிந்த பொதுமக்கள் பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்த சர்ச்சை முடிவதற்குள் மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் உள்ள பள்ளியின் கேண்டீனில் பணிபுரியும் 16 வயது சிறுவன், பள்ளி வளாகத்தில் ஏழு வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சிக்குள்ளானது..
மகாராஷ்டிர மாநிலம், பால்கரின் நைகான் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் 6வயது சிறுமியை., அதே பள்ளியின் கேண்டினில் வேலை செய்யும் 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது., தெரியவந்தது.
இதுகுறித்து அந்த சிறுமி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்., இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் தலைமை ஆசிரியர் உதவியோடு நைகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் கடந்த 15 நாட்களில் மூன்று அல்லது நான்கு முறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த 16வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..