கலியுக கர்ணன் மீது பாலியல் குற்றச்சாட்டு..!! பதிலடி கொடுத்த ஹர்ஷா சாய்..!!
பிரபல யுடியூபர் ஹர்ஷாசாய் மீது எழுந்துள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து தனது இன்ஸ்டாகிராம் மூலம் பதில் அளித்துள்ளார்..
ஹர்ஷா சாயை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.., அப்படியே இருந்தாலும் அவர்கள் குறைவு தான்.. “Harshasai” என்ற யுடியூப் சேனல் மூலம் தன்னுடிய சப்ஸ்க்ரைபர் மட்டுமின்றி ஏழை எளிய மக்கள் பலருக்கும் உதவி செய்து வருகிறார் ஹர்ஷா சாய்.. இதனால் இவரை பலரும் கலியுக கர்ணன் என்றே அழைப்பார்கள்..
உதரணத்திற்கு., படிப்பில் ஆர்வம் இருந்தும் பணம் கட்ட முடியாமல் வீட்டில் தங்கி தங்கி இருந்த மாணவர்களுக்கு உதவிகளை செய்தவர்., பல்வேறு விவசாயிகளுக்கு நட்சத்திர உணவகத்தில் விருந்து அளித்தவர்., இலவச பெட்ரோல் பங்க் ஓபன் செய்து வாகன ஓட்டிகள் பலருக்கும் இலவச பெட்ரோல் வழங்கினார்..
இதானாலேயே ஹர்ஷா சாய் என்றால் பலருக்கும் பிடிக்கும் இப்படியாக ஜீரோ ஹேட்டர்ஸ் இருக்கும் ஹர்ஷா சாய் மீது விழுந்திருக்கும் குற்றச்சாட்டு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கடந்த செப்டம்பர் 24 ம் தேதி அன்று ஹைதராபாத் நர்சிங்கி காவல்நிலையத்தில் மும்பையை சேர்ந்த 25 வயது நடிகை ஒருவர் ஹர்ஷா சாய் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.. அந்த புகாரில் குறிப்பிடிருப்பதாவது..
பிரபல யூடியுபரும் நடிகருமான ஹர்ஷா சாய் மும்பையில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் பங்கேற்றோம் அதன் பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் கடந்த ஆண்டு வெளியானது.. இதனால் எங்களுடைய உறவானது நட்பில் இருந்து தோன்றியது., நாளடைவில் இந்த நட்பானது காதலாக மாறியது எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு வலுப்பட்டது பின் ஒருநாள் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஹர்ஷா சாய் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதன் பின் தன்னை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாகவும் மேலும் அந்த பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதகாவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்..
அந்த நடிகை அளித்த புகாரின் பேரில் ஹர்ஷா சாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது., புகாரை ஏற்ற காவலர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற் கட்டமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர்..
மேலும் இந்த வழக்கு குறித்து அந்த நடிகை அளித்த புகாரை வைத்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை ஹர்ஷா சாய் கைது செய்யபடவில்லை என்பது குறிப்பிடதக்கது..
இந்நிலையில் ஹர்ஷா சாய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது..
“இவை அனைத்தும் பணம் பறிக்கும் பொய்யான குற்றச்சாட்டுகள். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும், உண்மை விரைவில் வரும். என் வழறிஞர் இனி இதை பார்த்துக்கொள்வர்” என்று Thumbsup காட்டி பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ஹர்ஷா சாய் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பலரும் ஹர்ஷா சாய்க்கு ஆதரவாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..