திட்டக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பத்து லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் இவரது மகன் விஜயராஜ் இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பிஜேபி கட்சியைச் சேர்ந்த பொன். பெரியசாமி முன் பணம் ரூபாய் 50,000 பொன்.பெரியசாமி வாங்கி உள்ளார்.
இந்நிலையில் பொன். பெரியசாமி டெல்லிக்கு ராஜேந்திரன் மகன் விஜய்ராஜ் மற்றும் பொன் பெரியசாமி கூட்டாளி தீபக்கை அழைத்துச் சென்று அங்கு ஒருவரை காட்டி இவர்தான் மத்திய மந்திரி உதவியாளர் என்று கூறியதாக கூறப்படுகிறது பின்னர் பொன். பெரியசாமி விஜயராஜிடம் மீதி தொகை 9,50,000 கொடுக்குமாறு கேட்டுள்ளனர் அப்போது ராஜேந்திரன் பொன் பெரியசாமி கூட்டாளி தீபக் அக்கவுண்டில் ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் டெபாசிட் செய்த கூறப்படுகிறது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட பொன்.பெரியசாமி அவரது கூட்டாளி தீபக் ஆகியோர் வேலை வாங்கித் தருவதாக காலம் தாழ்த்தி வந்தனர் இந்த நிலையில் ராஜேந்திரன் வேலை வேண்டாம் என்றும் நான் கட்டிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு அவர்கள் காலதாமதம் தாழ்த்தி வந்துள்ளனர் இந்த நிலையில் ராஜேந்திரன் கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் திட்டக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் பொன்.பெரியசாமி, தீபக், பழனிவேல் ஆகிய மூவரும் தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று பிஜேபி நிர்வாகி பொன்.பெரியசாமியை போலீசார் கைது செய்தனர் திட்டக்குடி பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் பணம் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது செய்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post