சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 10ரூபாய் உயர்ந்து 5,535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றும் தங்கம் விலை உயர்ந்து இருப்பதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 6015 ரூபாய்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 48,120 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 5,535 ரூபாய்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 44,280 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ 80.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை 200 குறைந்து ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.