சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது ஆதித்யா எல்-1.
சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
இந்த ஆய்வில், 100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1. மேலும், சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா எல் 1. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.
இந்நிலையில் ஏவப்பட்ட விண்கலம் முதல் இரண்டு கட்டங்களை வெற்றிகரமாக தாண்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து சூரியனை ஆய்வு செய்ய ஏவும் முதல் விண்கலம் இதுவே ஆகும்.