பாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்படுகிறது என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கொள்கை இல்லாத அதிமுக, அண்ணாவின் பெயரை வைத்துக்கொள்ள எந்த தகுதியும் இல்லை. சி.ஏ.ஜி அறிக்கையில் வெளியான ஊழல், அதானி குழும முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசின் இந்த ‘ஒரே நாடு ஒரு தேர்தல் திட்டத்திற்கு தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆகவே தான் பாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்படுவது உறுதி என தெரிவித்திருந்தார்.