மோசடியில் சிக்கிய அதானி, செபி…!! ஆனந்த் ஸ்ரீனிவாசன் வைத்த செக்..!!
அமெரிக்காவின் பிரபல “ஷார்ட் செல்லர்” நிறுவனம் என சொல்லப்படும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை அதானி குழுமத்தை உலுக்கியது. அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான “செபி” அதனை 1 வருடதிற்கும் மேலாக விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் செபி தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பை நேரில் வந்து ஆஜராகும் படி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. அது தொடர்பான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அமெரிக்க நேரப்படி ஜூலை 1ம் தேதி தனது இணையத்தில் நீண்ட நெடிய பதிவை செய்தது.
இதுபற்றி ஹிண்ட்பார்க் கொடுத்துள்ள விளக்கத்தில் அவர் கூறியதாவது, செபி அனுப்பியுள்ள 46 பக்க நோட்டீஸ் அதானி பங்குகளை ஷாட் செய்வதற்காக எங்களிடம் விளக்கம் கேட்டது. நாங்கள் ஒரு ஏஜென்ட் முதலீட்டாளர் (investor partner) மூலம் ஒரு ஒப்பந்தத்தை போட்டு கொண்டோம். அதானி பங்குகளை ஷாட் செய்தோம். அந்த முதலீட்டு பங்குதாரர், இந்தியாவைச் சார்ந்தவர் அல்ல, அவர் வெளிநாட்டு நிதி அமைப்பின் கீழ் கணக்கை வைத்திருந்தவர். அந்த கட்டமைப்பின் கீழ் தான் அதானி பங்குகள் ஷாட் செய்யப்பட்டது, எனவே ஹிண்டன்பர்க் நேரடியாக அதானி பங்குகளில் ஷாட் செய்யவில்லை என செபிக்கு மட்டும் அல்லாமல் மொத்த உலகிற்கும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது பதிவின் மூலம் விளக்கம் கொடுத்தது.
தவல் புச் பிளாக்ஸ்டோனுக்கு ஆலோசகராக இருந்த காலத்தில், SEBI முக்கிய REIT விதிமுறைகளில் மாற்றங்களை முன்மொழிந்து, அங்கீகரித்து, எளிதாக்கியது. இதில் 7 ஆலோசனைத் தாள்கள், 3 ஒருங்கிணைந்த புதுப்பிப்புகள், 2 புதிய ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் யூனிட்களுக்கான நியமன உரிமைகள், குறிப்பாக பிளாக்ஸ்டோன் போன்ற தனியார் ஈக்விட்டி நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தது. தொழில்துறை மாநாடுகளின் போது, SEBI தலைவரான மாதபி புச், REITகளை தனது “எதிர்காலத்திற்கான விருப்பமான ப்ராடெக்ட்” எனக் கூறி, முதலீட்டாளர்கள் சொத்து வகுப்பை “நேர்மறையாக” பார்க்குமாறு வலியுறுத்தினார்.
அந்த அறிக்கைகளை வெளியிடும் போது, அவர் இந்த திட்டத்தில் இருந்து பிளாக் ஸ்டோன் நிறுவனம் மிகவும் பயனடையும் என்பதை குறிப்பிடவில்லை. மாதபி புச் தற்போது அகோரா அட்வைசரி எனப்படும் இந்திய ஆலோசனை நிறுவனத்தில் 99% பங்குகளை வைத்துள்ளார், அங்கு அவரது கணவர் இயக்குநராக உள்ளார்.
2022 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் அவருக்கு $261,000 வருவாயை ஆலோசனை வழங்கியதற்கு கொடுத்துள்ளது. இது அவர் செபியில் வாங்கிய சம்பளத்தை விட 4:4 அதிகம். மாதபி புச், அதன் பங்குதாரர் பட்டியல் மற்றும் கார்ப்பரேட் பதிவுகளின்படி, தனது கணவர் தவால் புச்சுடன் ஒரு இயக்குநராக வணிகத்தின் 99% உரிமையாளராக இருக்கிறார். இதை ஹிண்டன்பெர்க் வெளியிட்டுள்ளது. இத்தனை கேள்விக்கும் இவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று பார்ப்போம், என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..