மேற்குவங்கம் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்..!!
மேற்குவங்கம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் இன்று காலமானார்..
மேற்குவங்கம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா (வயது 80) உடல்நலக்குறைவு காணமாக கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. அவருக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த ஒரு வருடமாக தொடர் சிகிச்சையில் இருந்ததுடன் அரசியல் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளாமலே இருந்துள்ளார்.. இன்று வயது மூப்பு காரணமாக புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்.
புத்ததேவ் பட்டாச்சார்யா மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் முதல் 2011ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார்..
கொல்கத்தாவில் பள்ளி ஆசிரியராக இருந்த இவர் அரசியல் மீது உள்ள ஆர்வத்தால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.. இவர் பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது ..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும், பிறகு அமைச்சராகவும் பணியாற்றிய அவர், 2000 ஆம் ஆண்டு மேற்குவங்க துணை முதலமைச்சராக பதவியேற்றார். முதலமைச்சராக இருந்த இவர், கடந்த 2001ம் ஆண்டு முதல் மற்றும் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற காரணமாக இருந்தார்.
புத்ததேவ் பட்டாச்சார்யா மரணத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்..
“முன்னாள் முதல்வர் ஸ்ரீ புத்ததேவ் பட்டாச்சார்ஜியின் திடீர் மறைவு அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. கடந்த பல தசாப்தங்களாக நான் அவரை அறிந்திருக்கிறேன், கடந்த சில வருடங்களாக அவர் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே திறம்பட ஒதுங்கியிருந்தபோது சில முறை அவரைச் சந்தித்தேன்.
இந்த துயரமான நேரத்தில் மீரடி மற்றும் சுசேதனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். சிபிஐ(எம்) கட்சி உறுப்பினர்களுக்கும், அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறுதிப் பயணம் மற்றும் சடங்குகளின் போது அவருக்கு முழு மரியாதை மற்றும் சம்பிரதாய மரியாதை அளிப்பதாக நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம்”. என அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..