செந்தில் பாலாஜி வழக்கு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியுமா..? என்று ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் உள்ள, செந்தில் பாலாஜிக்கு கடந்த ஒருவருடமாக ஜாமீன் கேட்டும் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் ஏற்கனவே மனுதாக்கல் செய்தபோதிலும் அவை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இறுதி நம்பிக்கையாக இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார் செந்தில் பாலாஜி.. ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதனால் கடுப்பான செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறை தொடர்ந்து முயற்சித்து வந்தது .இதனால் விசாரணையை தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது என்று குற்றம்சாட்டியது.
இவ்வழக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஏஜி மஷிக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனு மீது விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து.உத்தரவிட்டது.இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின் போது , மாநில போலீஸ் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ள போது ED வழக்கு போட முடியுமா..? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை வருகின்ற 12ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென நேற்று உத்தரவிட்டிருந்தது.. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..