அதிமுக பொதுச்செயலாளர், சேலத்தில் முக்கிய புள்ளி ஒருவரை வைத்து தன்னிடம் பேரம் பேச வந்ததாக தனபால் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜ் சகோதரர் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசியது,
கோடநாடு கொலைவழக்கு பற்றி 2017 ஆம் ஆண்டிலிருந்தே தவறுகளை பற்றி கூறிக்கொண்டு தான் இருக்கிறேன். யாரும் சொல்லிக் கொடுத்து நான் பேசவில்லை என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நபர் ஒருத்தரை வைத்து பேரம் பேச வருகை தந்தார்.கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியை காட்டிக்கொடுக்க வேண்டாம், எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். பணத்திற்கு ஆசைப்படுவானாக இல்லை..கோடநாட்டில் நடந்த உண்மை வெளிவர வேண்டும். இதை தடுக்க கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த முக்கியபுள்ளி மூலம் பேரம் பேச வந்தார்.பேரம் பேசவேண்டாம் என்று அனுப்பி வைத்துவிட்டேன் என்றும் கூறினார்.
எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்சனை கிடையாது நான் பேட்டி கொடுப்பதால் எனது மனைவிக்கும் என் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவ்வாறு கூறியுள்ளார்.திருமணமான 23 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும், கருத்து வேறுபாடு கிடையாது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூண்டுதல்பேரில், தாரமங்கலம் ஒன்றிய கோனகபாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் என்பவர் எனது மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்து கோவையில் சிபிசிஐடியில் ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக அடுத்த நாளே சம்மன் அனுப்பவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.என்உயிருக்கு ஆபத்து உள்ளது, நாட்கள் கடந்து போகபோக, நீர்த்து போய் வருகிறது என்றார். கோடநாடு வழக்கு தொடர்பாக அப்போதைய விசாரணை அதிகாரி, ஐஜி சுதாகர் மற்றும் சேலம் எஸ்பி யாக இருந்த இருவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு விலை போய்விட்டனர்.இவர்கள் அனைவரும் சேர்ந்து தான், என்னை கடுமையாக தாக்கினர்.
கோடநாடு வழக்கில் எவ்வளவு பணம் வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி சொன்னதாக கூறி பேரம் பேசினர். எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசவேண்டாம் என்று கூறி வந்தனர்.அதிமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிச்சாமியால் தான் எனக்கும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக எனது மனைவி பயத்திற்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது; தந்தை இல்லாமல் போனால் என்னவாகும் என்று தான் எனது மனைவி பயப்படுகிறார் என்றும் கூறினார்.
கோவையில் சிபிசிஐடி விசாரணையில் ஆஜராகி அனைத்து உண்மைகளும் சொல்கிறேன்.மேலும் புகார் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றார். மேலும் எனது மனைவி வைத்து புகார் கொடுப்பதால் தன்னை காவல்துறை கைது செய்துவிடும், பின்னர் கோடநாடு வழக்கில் விசாரணையில் ஆஜராகாமல் தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.