விற்பது வட்ட வளையல் ஆனால் என் வாழ்க்கை ஒரு..? ஊரும் உறவும்-7
கண்ணாடி வளையல் என்றால் அணியாத பெண்களும் இல்லை, அதை விரும்பாத பெண்களும் இல்லை. கண்ணாடி வளையலை கடையில் பார்த்ததும் அதை உடனே வாங்க தோன்றும்.., அது தவறு இல்லை ஆனால் என்றாவது அதன் பின்னே அதை விற்பனை செய்பவர்கள் பற்றி நினைத்து இருக்கிறோமா..?
அப்படி ஒரு நாள், நான் கண்ணாடி வளையல் வாங்க சென்ற பொழுது நடந்த கதை தான் இது. கோவிலுக்கு சென்று திரும்பும் பொழுது அந்த வீதி முழுவதும் விதவிதமாக கண்ணாடி வளையல்கள் விற்று கொண்டிருந்தார்கள்.
வாங்க வேண்டும் என்ற ஆசையில்.., கடைக்கு சென்று ஒவ்வொரு வளையலாக எடுத்து சென்று வாங்க ஆரம்பித்தேன்.., ஒரு டசன் கண்ணாடி வளையலின் விலை 25 ரூபாய் என்று சொல்லி விற்றார்.
நான் 6 செட்கள் எடுத்தேன்.. என் பக்கத்தில் ஒரு 45 வயது உடைய.., மற்ற மாநிலத்தை சேர்ந்த பெண்மணி சுமார் ஒரு மணி நேரமாக, அந்த கலர் சரியில்லை, இது தேவையில்லை என சொல்லி கடைசியில் 10 டசன்கள் எடுத்தார்.
மொத்தம் 250 ரூபாய் ஆகிறது நீங்கள் 220 ரூபாய் கொடுத்தால் போதும் என அந்த கடைக்காரர் சொன்னார், ஆனால் அந்த பெண்.., 220 ரூபாய் எல்லாம் தரமுடியாது 150 ரூபாய் என்றால் சொல்லுங்கள் நான் எடுத்துக்கொண்டு போகிறேன் என வாக்குவாதம் செய்ய ஆரமித்தார்.
இந்த வளையல்கள் அனைத்தும் நாங்கள் வெளி மாநிலத்தில் இருந்து வரவைக்கிறோம்.., வண்டி வாடகை எல்லாம் போக எங்களுக்கு ஒரு வளையளுக்கு லாபம் கிடைப்பது.., 3 ரூபாய் தான்.
இதில் வரும் மாதம் லாபத்தை வைத்து தான், கடை வாடகை, என் பிள்ளைகள் படிப்பு உணவு எல்லாம் பார்க்க வேண்டி இருக்கும். நீங்கள் ஒரே அடியாக விலையை குறைத்தால் எப்படி..? என அவர் கேட்க.
அது உங்கள் தலை எழுத்து என அந்த பெண் பதில் அளித்து .., 220 ரூபாய் பணத்தை முகத்தில் விசிறி அடித்து சென்று விட்டார்.., அவர் முகம் வாடி விட்டது., இருந்தும் மற்றொருவர் வளையல் வாங்க வந்ததும் புன்னகைத்து கொண்டு.., வளையல் விற்க ஆரம்பித்தார். எப்படி அண்ணா என்று கேட்டதற்கு.
நான் முகம் சுளித்து மற்றவர்களை கஷ்ட படுத்தினால், என் பிள்ளைகள் தான் கஷ்டப்படுவார்கள்.., என்றார். இனி நீங்கள் தெருவோரம் கடைகளில் சென்று பொருட்களை வாங்கும் பொழுது அவர்களின் பின் இருக்கும் வாழ்க்கையை நினைத்து பாருங்கள்.
மேலும் இதுபோன்ற பல கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..,
-வெ.லோகேஸ்வரி.

















