மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு..!! நீதிபதி பிறப்பித்த உத்தரவு..!!
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனுக்கு ஜாமின் வழங்க கூடாது என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த “தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில்” பணத்தை முதலீடு செய்த 144 பேரிடம் இருந்து 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்…
அந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் இயக்குனரும் பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அதன் பின் காவல் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை சிறப்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நிதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி மலர் வேலன்டீனா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேவநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்வேறு வாதங்களை முன் வைத்தார்.. அதில் பண மோசடி செய்யவில்லை என்றும் அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி தர உள்ளதாகவும் வாதங்களை முன் வைத்தனர்..
அதற்கு பாதிகப்பட்ட முதலீட்டாளர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்., பாதிக்கப்பட்டவர்களுக்கு வைப்பீடுகள் தங்களது பணத்தை திருப்பி தரவில்லை என்றும் இந்த நிதி முறைகேடு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ய வேண்டும்..,
எனவே தேவநாதன் உட்பட கைது செய்யப்பட்ட 3பேருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பாபு இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் தலைமறைவாக உள்ளார் என்றும் 800க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் தினமும் புகார்கள் வந்துகொண்டே இருப்பதாகவும். விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கின் ஜாமின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..