என் சாவுக்கு காரணம் சீமான் தான்..!! இது தான் என் கடைசி வீடியோ..!! வைரலாகும் விஜயலக்ஷ்மி வீடியோ..!!
கடந்த சில தினங்களாக விஜயலட்சுமி சீமான் விஷயம் பெரும் பரபரப்பாக பேசபட்டு வரும் தற்போது இணையத்தில் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் அதற்கு காரணம் சீமான் தான்.., என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்..
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.., இந்நிலையில் கடந்த மாதம் சீமான் மீது மீண்டும் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி கர்ப்பமாக்கி, 5 முறை கருக்கலைப்பு செய்ததாக அதில் கூறியிருந்தார். மேலும் நடிகை விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்றபடை தலைவர் வீரலட்சுமியும் ஆதரவு தெரிவித்து வந்தார்.
இதனால் சீமான் – வரலட்சுமி இடையேயான மோதல் முற்றியல் திடீரென சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றார் விஜயலட்சுமி, மேலும் சென்னை பக்கமே வரமாட்டேன் என்று கூறி பெங்களூரு சென்றார்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர் “இதுதான் என் கடைசி வீடியோ”.., சாவை நோக்கி தான் எங்களின் பயணம் உள்ளது. நானும் சாகப் போகிறேன், எனது அக்காவையும் கூட்டிக்கொண்டு போகப்போகிறேன்..,
2011-ல் நான் இந்த வழக்கை தொடுத்த போது அப்பவும் என்னை அச்சுறுத்தி, மிரட்டி விசாரணைக்கு வரவிடாமல் செய்தனர். 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதையே தான் செய்கின்றனர்..
மான நஷ்ட வழக்கு போடுவோம் என கூறி டார்ச்சர் செய்கின்றனர். எங்களை யாரும் வாழ விடமாட்டாங்க.., எனவே நாங்கள் சாகப் போகிறோம்.
அதற்கு சீமானும், நாம் தமிழர் கட்சியும் தான் காரணம். இதன் பிறகு சீமானை கைது பண்ணுங்க.., சீமானை விட்டுடாதிங்க.. நான் சாக போறேன் சீமானின் டார்கெட்.. நான் சாகனும் அதற்கு தான் அவர் ஆசைப்படுராறு..
12 வருடங்களாக நான் அனுபவித்து வரும் இந்த நரக வேதனைக்கு, விடியல் கிடைக்கும் என நினைத்தேன்.. அதுவும் எனக்கு கிடைக்கவில்லை.
என்னை மேலும் அவமானப்படுத்தி, கெட்டப் பெயர் கொடுத்து வருகின்றார் சீமான்.. சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் விடக் கூடாது.. காவல்துறையினர் சீமானை கைது செய்ய வேண்டும்.. இது தான் எனது கடைசி வீடியோ” என்று உருக்க பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்..
Discussion about this post