திருப்பத்தூரில் முக்கிய ஆலைக்கு சீல்..!! அதிரடியாக களத்தில் இறங்கிய அதிகாரி..!!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இயங்கி வரும் வாசீம் ஆசன் தோல் தொழிற்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்க்கொண்ட போது,தோல் தொழிற்சாலை நிர்வாகம், தோல் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள நிலத்தில் தேக்கி வைத்தும், மேலும் பைப் லைன் வழியாக பாலாற்றில் தோல் கழிவுநீரை வெளியேற்றுவது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து வாசீம் ஆசன் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து, தொழிற்சாலையை மூட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், தோல் பதனியிடும் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீர் அல்லது திடக்கழிவுகளை நிலத்தின் மேல் தேக்கி வைத்தால், தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை மூட உத்தரவு பிறபிக்கப்படும் என மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..