வேலூரில் தொடரும் ஊழியர்கள் போராட்டத்திற்கு இது தான் காரணமா..?
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் செல்வம் தலைமையில் ஆர்பாட்டமானது நடந்தது இதில் திரளான நியாய விலைக்கடை பணியாளர்கள் பங்கேற்று 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.
இதில் பொருட்களை தரமாகவும் சரியான எடையிலும் வழங்க வேண்டும் 4 ஜி சிம்மிற்கு ஏற்றார் போல் எடை விலை ஆகியவைகள் அடங்கிய புதிய முனையம் வழங்க வேண்டும் கே ஒய் சி முறையில் வீடுவீடாக சென்று கைரேகை பெறுவதையும் மற்றும் விடுமுறை நாட்களில் கைரேகை பெறும் பணி செய்ய வலியுறுத்தவதையும் கைவிட வேண்டும்.
பணி வரன் முறை படுத்தாத பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கும் பணி வழங்க வேண்டும் நியாயவிலைகடை பணியாளர் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை அவர்கள் வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
நியாயவிலை கடைகளில் கட்டுபாடற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி இறக்குமதி செய்வதை கைவிட வேண்டும் நியாயவிலைகடை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் மற்றதுறைகளை போல் இத்துறைக்கும் மாத ஊதிய நிதியை ஒதுக்க வேண்டும் நியாயவிலை கடைகளில் ஆய்வின் போது இருப்பு இருக்கும் பொருட்களை இருப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் அதற்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..